Thursday, February 6, 2014

இடையை மார்பை
காமம் ததும்ப பார்த்து போ
கையை பிடிக்கையில்
உள்ளங்கையில் தடவு
என்னை கடக்கையில்
மார்பழுத்தி உரசி செல்
தொப்புளில் தொட ஆசையா
அனுமதிக்கிறேன்
ஆனால்,
தொட்டுக்கொண்டே கேட்டுவிடாதே
தொப்புள்கொடி உறவு எங்கே என்று..
காமமும் நானும்
சுக்குநூறாக நொறுங்கி போவோம்
மலடி-
என்ற வார்த்தையை விட கொடுமையானது
உனது பரிதாப பார்வை

No comments:

Post a Comment