Sunday, March 30, 2014

எனக்கு...


முயல்குட்டி...

முயல்குட்டி மீன்தொட்டி பள்ளத்தாக்கு புல்வெளி - என்று
இடஞ்சுட்டி பொருள் விளக்குவதில் நீ வல்லவன்
என் நித்தில பூமடியில் உன்னை விழ வைக்கும் -
செப்படி வித்தையில் நான் வல்லவி

மீசை குத்துதுடா...

மீசை குத்துதுடா என
சொல்லும் கணங்களில் எல்லாம்
நினைவில் வந்து போகிறது
உனக்கு கூட குத்தியிருக்கும்
உதடல்லாத உதட்டின் மேல்
மீசையல்லாத மீசை